News March 20, 2025
ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பசுமை தமிழ்நாடு இயக்கத்துடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தினை ஒருங்கிணைந்த மரக்கன்றுகள், நாற்றங்கால் பண்ணை அமைத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பிரசாந்த் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
Similar News
News March 21, 2025
களைக்கொல்லி குடித்தவர் பலி

கள்ளக்குறிச்சி அழகாபுரத்தை சேர்ந்தவர் பொன்னுவேல்(38). கடந்த 2 ஆண்டுகளாக நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், மார்ச்.17ம் தேதி ‘களைக்கொல்லி’ மருந்தை குடித்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்யில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
News March 21, 2025
கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கு இன்று விசாரணை

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் தொடர்புடைய 37 சிறார்கள், கடந்த பிப்.21 நீதிமன்றத்தில் ஆஜராகினர். பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, 2022ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 1,100 பக்க இறுதி அறிக்கை நகல், வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், இதன் விசாரணை இன்று நடைபெறுகிறது.
News March 20, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.