News March 28, 2024
ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு பரிசீலனை

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு இன்று பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வேட்புமனு ஏற்பு, எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் வேட்புமனு ஏற்பு,
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு ஏற்பு, சுயேட்சை வேட்பாளர் அன்பு ரோஸ் மனு ஏற்பு, சுயேட்சை வேட்பாளர் இளைய குமார் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Similar News
News January 26, 2026
திண்டுக்கல்லில் சோகம்: மின்சாரம் தாக்கி பலி!

உசிலம்பட்டி மெய்யம்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் வாரந்தோறும் ஒட்டன்சத்திரம் கே.கே. நகரில் நடைபெறும் மாட்டுச்சந்தையில் மாடுகள் வாங்குவதற்காக நேற்று நடைபெற்ற மாட்டுச்சந்தைக்கு தனது லாரியை ஓட்டிக்கொண்டு இளங்கோவன் வந்தார். ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தை அருகே லாரியை நிறுத்திவிட்டு இறங்கும் போதுமேலே சென்ற உயர் அழுத்தமின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இளங்கோவன் உயிரிழந்தார்.
News January 26, 2026
திண்டுக்கல்: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் திண்டுக்கல் மாவட்ட சுகாதார அதிகாரியிடம், 0451-2432817 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.
News January 26, 2026
திண்டுக்கல்லில் குடியரசு தின விழா

நமது இந்திய திருநாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் சரவணன் இன்று காலை 8.05 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து காவல், தீயணைப்பு, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பை பார்வையிட்டு மரியாதை பெற்றார். பின்னர் சமாதானத்தின் அடையாளமாக வெண்புறாக்களும் வண்ண பலூன்களும் பறக்கவிடப்பட்டன.


