News April 8, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் பைக் திருட்டு

image

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முட்டத்தூர் தனியார் நிறுவன ஊழியர் குமார் தனது பல்சர் பைக்கில் வந்தார். பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்று திரும்பிய சில நிமிடங்களில் பைக் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் தாலுகா போலீசாரிடம் புகார் அளித்தார். ஆட்சியர் அலுவலகத்தில் அரங்கேறிய இந்த திருட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News April 17, 2025

விழுப்புரம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

image

விழுப்புரத்தில் வேளாண் இணை இயக்குநா் எஸ்.ஈஸ்வரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு, மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை,வேளாண் வணிகம் துறைகளைச் சார்ந்த கள அலுவலா்கள், மகளிா் திட்ட சமுதாயப் பயிற்றுநா்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டு, விவசாயிகளுக்கான தனி அடையாள எண் வழங்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. ஏப்.30-க்குள் தனி அடையாள எண் பெற பதிவு செய்துகொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க.

News April 17, 2025

திரெளபதி அம்மன் கோவிலுக்குள் சென்ற பட்டியலின மக்கள்

image

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி விழுப்புரம் அடுத்த மேல்பாதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திறக்கப்பட்டது. இன்று காலை கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், பட்டியலின மக்கள் கோயிலுக்கு உள்ளே சென்றனர். முதல் முறையாக உள்ளே சென்று திரெளபதி அம்மனை தரிசித்ததாக மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பட்டியலின மக்கள் உள்ளே சென்று வழிபடுவதை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று ஐகோர்ட் தெரிவித்திருந்தது.

News April 16, 2025

அமைதி தரும் மரக்காணம் கடற்கரை

image

விடுமுறை தினத்தில் வெளியில் சென்று வர அருகிலேயே சிறந்த சுற்றுலா தலமாக மரக்காணம் கடற்கரை உள்ளது. கீழக்கு கடைகரையோரம் அமைந்துள்ள இந்த பகுதியின் அமைதியான சூழல் மனதுக்கு அமைதி தரும். அமைதியை விரும்புவோர் நிச்சயம் சென்று வரலாம். இங்குள்ள உப்புத் துறை இந்த கடற்கரையின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இப்பவே உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ட்ரிப்க்கு பிளான் பண்ணுங்க

error: Content is protected !!