News August 9, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் நீர்வளத்துறை ஆய்வு கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை (ம) நீர்வளத்துறை சார்பில் இன்று(ஆக.9) ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நீர்வளத்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் கட்டப்பட்டு வரும் அணைகள் குறித்து தகவல் அளிக்கப்பட்டது. மேலும் முதலமைச்சரின் அறிவிப்புகளில் திட்டங்கள் குறித்தும் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கேட்டறிந்தார்.

Similar News

News August 10, 2025

விழுப்புரம் மக்களே கனமழை எச்சரிக்கை – உஷார்!!

image

விழுப்புரம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இன்று (ஆக.10) இரவு வரை கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை வர வாய்ப்புள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்படலாம். உணவு, மெழுகுவர்த்தி, விளக்கு போன்ற அத்தியாவசிய பொருட்களை எளிதாய் எடுக்கும் வண்ணம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க சொல்லுங்க.

News August 10, 2025

விழுப்புரம்: அண்ணா பல்கலை. வகுப்புகள் எப்போது?

image

விழுப்புரம் மாவட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான திண்டிவனம் மற்றும் விழுப்புரம் பொறியியல் கல்லூரிகளில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக வகுப்பு நாளை (ஆக.11) முதல் ஆக.18 வரை நடைபெற உள்ளது. அதன்பின் ஆக.18 முதல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் கல்லூரி நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 10, 2025

விழுப்புரம்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!