News January 7, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த நபர் பலி

image

கடந்த 3ஆம் தேதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்லாவரம் அடுத்த திரிசூலம் வைகை தெருவைச் சேர்ந்த பாபு என்பவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். 70% தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தச் சூழலில், சிகிச்சை பலனின்றி பாபு நேற்று (ஜன.6) உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 21, 2026

JUST IN: தாம்பரம் அருகே காய்ச்சலால் கல்லூரி மாணவி பலி

image

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சரண்யா (20). இவர் சேலையூரில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் சரண்யா கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று உடல்நிலை மிகவும் மோசமானதால் கல்லூரியில் உள்ள மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவர்களின் பரிசோதனையில் சரண்யாவுக்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது

News January 21, 2026

BREAKING: மதுராந்தகம் வரும் பிரதமர்… பலத்த சோதனை!

image

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாளை மறுநாள் நடைபெறும் NDA கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்நிலையில் பிரதமர் வருகை தரவுள்ள நிலையில், ஹெலிபேடில் ஹெலிகாப்டரை தரையிறக்கி சோதனை செய்யப்பட்டது. மேலும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் பாஜக, அதிமுக-வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.

News January 21, 2026

செங்கை: ஒரு ‘Hi’ போதும், வங்கி விவரங்கள் Whatsapp-இல்!

image

செங்கல்பட்டு மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2) Canara Bank – 90760 30001, 3) Indian Bank – 87544 24242, 4) IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!