News January 14, 2025
ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் குடும்பத்துடன் கலந்து கொண்டார். பின்னர் அரசு ஊழியர்கள் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய உடை அணிந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
Similar News
News December 11, 2025
ஏ.ஆர்.ஆர். சீனிவாசனுக்கு எதிரான வழக்கு ரத்து

பால்வளத்துறையின் அப்போதைய அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை கண்டித்து கொரோனா பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி போரட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகர் திமுக எம்.எல்.ஏ., ஏ.ஆர்.ஆர். சீனிவாசனுக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை இன்று ரத்து செய்து நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார்.
News December 11, 2025
BREAKING விருதுநகர் அமைச்சரின் வழக்கு ரத்து

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் 2020-ம் ஆண்டில் விருதுநகரில் போராட்டம் நடைபெற்றது. கொரோனா காலத்தில் தடையை மீறி போரட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
News December 11, 2025
விருதுநகர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

விருதுநகர் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <


