News November 23, 2024
ஆட்சியர் அலுவலகத்தில் குற்றம் சாட்டிய விவசாயிகள்

விழுப்புரத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விவசாயிகள் இருவேல்பட்டு வாய்க்காலை தூர் வார வேண்டும், பட்டா மாற்றம் நில அளவைப் பணிகளை செய்து கொடுக்காமல் அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர், விவசாயிகளுக்கு கிசான் அட்டை வழங்குவதில்லை, கூட்டுறவு வங்கிகள் கடன் தருவதில்லை என குற்றம்சாட்டினர்.
Similar News
News July 8, 2025
விழுப்புரம்-சென்னை கடற்கரை ரயில் பகுதியாக ரத்து

திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக, விழுப்புரத்தில் இருந்து பகல் 2:40 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் பாசஞ்சர் ரயில் (எண் 66046) வரும் ஜூலை 12 மற்றும் ஜூலை 15ம் தேதிகளில் முண்டியம்பாக்கத்தில் இருந்து பகல் 2:55 மணிக்கு புறப்பட்டு செல்லும் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
News July 8, 2025
தாம்பரம்-விழுப்புரம் பயணிகள் ரயில் பகுதியாக ரத்து

தாம்பரத்தில் இருந்து காலை 9:45 மணிக்கு விழுப்புரத்திற்கு புறப்படும் தாம்பரம் ~விழுப்புரம் பாசஞ்சர் ரயில் (எண் 66045) வரும் ஜூலை12 மற்றும் ஜூலை15ம் தேதிகளில் திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக முண்டியம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
News July 8, 2025
அன்புமணிக்கு எதிராக பாமக செயற்குழு தீர்மானம்

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம். “பொதுவெளியில் ராமதாஸின் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது; நிறுவன தலைவருக்கு களங்கம் உருவாக்கும் வகையிலான செயல் கண்டிக்கத்தக்கது” என்று செயற்குழுவில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.