News August 16, 2024
ஆட்சியருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வு குறித்து மதுரை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை, விருதுநகரில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் குறித்து முறையாக கணக்கெடுத்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க கோரி வழக்கறிஞர் சகாய பிலோமின் ராஜ் தாக்கல் செய்த மனுவில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 9, 2025
அருப்புக்கோட்டை பைபாஸ் அருகே பஸ் விபத்து

அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி பைபாஸ் ராமசாமிபுரம் விளக்கு பகுதியில் இன்று விபத்து ஏற்பட்டது. பாண்டிச்சேரியில் இருந்து திருச்செந்தூருக்கு பயணம் செய்து திரும்பிய பஸ் விபத்தில் சிக்கியது. இதில், சிலர் லேசாக காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளனர்.
News November 9, 2025
விருதுநகர்: EB பில் அதிகமாக வருகிறதா? இத பண்ணுங்க!

விருதுநகர் மக்களே, கொஞ்சமா கரண்ட் யூஸ் பண்ணாலும், அதிகமா பில் வருதா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <
News November 9, 2025
ஸ்ரீவி: வீட்டில் மருத்துவம் பார்த்த பெண்

ஶ்ரீவி.,மங்காபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுகுணா(42). இவர் வீட்டில் வைத்து மக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக சுகாதாரத்துறைக்கு புகார் சென்றது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் சுகுணா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. சுகாதாரதுறை இணை இயக்குநர் காளிராஜ் அளித்த புகாரின் பேரில் நகர் போலீஸார் சுகுணா மீது வழக்கு பதிந்துள்ளனர்.


