News November 18, 2024
ஆட்சியரிடம் 489 மனுக்களை வழங்கிய பொதுமக்கள்
நாமக்கல்லில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 489 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா விடம் பொதுமக்கள் வழங்கினர். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் உமா நடவடிக்கைகளுக்கு பரிந்துரைத்தார்.
Similar News
News November 19, 2024
“துரோகம் செய்தவர்கள் வாழ்ந்த சரித்திரம் இல்லை”
நாமக்கல்லில் அதிமுக சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசுகையில், அதிமுக-விற்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதிமுக-வை அழிக்க பலர் பல வழிகளில் வழக்கு தொடுத்தனர். அதை அனைத்தையும் தவிடு பொடியாக்கி அதிமுக -வை, இபிஎஸ் கட்டி காத்துள்ளார். திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்தது.
News November 19, 2024
அதிமுக நிர்வாகிகள் கள ஆய்வுக் கூட்டம்
நாமக்கல் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்ற கள ஆய்வுக் கூட்டம், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி தலைமையில் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள, அதிமுகவின் பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் பங்கேற்றுப் பேசினார். இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News November 19, 2024
நாளை இங்கு மின்தடை அறிவிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் நாளை (20.11.24) பல்வேறு பகுதியில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் மல்லூர் துணை மின் நிலையம், ராசிபுரம் துணை மின் நிலையத்தில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இத்துணை மின்நிலையத்தின் கீழ் உள்ள ஊர்களில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.