News June 6, 2024
ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்

மலேசியாவில் உள்ள Lincoln பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா போட்டி நடைபெற்றது. இதில், இந்தியாவை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் இப்போட்டியில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்ற கோவை SSVM பள்ளியை சேர்ந்த 5 மாணவர்கள் நிகிலேஷ் , ஹரிஸ் கார்த்தி, ஹரி ஷர்வேஷ் , அபய், ஷஸ்வத் ஆகியோர் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற வருகை புரிந்தனர்.
Similar News
News August 14, 2025
கோவை: வங்கியில் பயிற்சியுடன் மாதம் ரூ.15,000!

கோவை மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 14, 2025
மாசு இல்லாத விநாயகர் சதுர்த்தி: கோவை கலெக்டர் அறிவிப்பு!

விநாயகர் சதுர்த்தியையொட்டி சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பிளாஸ்டிக், தெர்மாகோல் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளைத் தவிர்க்க வேண்டும். ரசாயன சாயங்கள் பயன்படுத்தப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கக் கூடாது. இயற்கையான சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என கோவை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News August 14, 2025
பட்டாசுக்கடை உரிமம் பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி

கோவை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றுடன் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதுவரை தற்காலிக பட்டாசு கடை அமைக்க 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் முழுமையான விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளனர்.