News January 2, 2026
ஆடையை கழற்றி டான்ஸ் ஆட சொன்னார்: தனுஸ்ரீ தத்தா

‘தீராத விளையாட்டு பிள்ளை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. 2018 ஆம் ஆண்டு #MEE TOO மூலம் கவனம் பெற்றார். இந்நிலையில், ஷூட்டிங் ஒன்றில் இயக்குநர் எனது ஆடையை கழற்றிவிட்டு நடனமாடச் சொன்னதாக தனுஸ்ரீ குற்றம் சாட்டியுள்ளார். அதற்கு நான் எந்த பதிலும் அளிக்கவில்லை, சக நடிகர்களும் பதிலளிக்காததால், இயக்குநரும் அமைதியானார் என்றும் அவர் தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
Similar News
News February 6, 2026
சேலத்தில் லட்ச கணக்கில் பண மோசடி! ALERT

சேலம் ஆத்தூர் அருகே பகுதிநேர வேலை வாய்ப்பு என்ற மின்னஞ்சல் லிங்க்கை நம்பி, தனியார் பள்ளி ஆசிரியர் செல்வம் தவணை முறையில் ₹6.46 லட்சத்தை இழந்துள்ளார். மீண்டும் பணம் கேட்கப்பட்டபோது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஹேமாவதி தலைமையிலான போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 6, 2026
’ஜன நாயகன்’ படத்துக்காக வெயிட்டிங்: தமிழிசை

‘ஜன நாயகன்’ படம் வராமல் இருப்பதற்கும் பாஜகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என தமிழிசை கூறியுள்ளார். 2 வருடம் படம் எடுத்துவிட்டு, 30 நாள்களுக்குள் அனுமதி கிடைக்கவேண்டும் என கேட்பதாக கூறிய அவர், கோர்ட்டுக்கு செல்லாமல் சென்சார் போர்டு சுட்டிக்காட்டிய தவறுகளை அவர்கள் நிவர்த்தி செய்திருக்கலாம் என்றார். மேலும், நாங்களும் ஜன நாயகன் எப்போது வரும், பார்க்கலாம் என்றுதான் காத்திருக்கிறோம் என பேசியுள்ளார்.
News February 6, 2026
திமுகவில் இணைந்தார்.. விஜயபாஸ்கர் அதிர்ச்சி

கரூர் மாவட்ட அதிமுக மருத்துவ அணிச் செயலாளர் Dr.தர்மேந்திரன், செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைத்து கொண்டார். இது, MR விஜயபாஸ்கர் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வரும் தேர்தலில் கரூர் தொகுதியை கைப்பற்ற விஜயபாஸ்கரும், தக்க வைக்க செந்தில் பாலாஜியும் கடுமையாக உழைத்து வருகின்றனர். கடந்த சில நாள்களாக இரு தரப்பும் மாறி மாறி நிர்வாகிகளை தங்கள் வசம் இழுத்து வருவதால் களம் சூடுபிடித்துள்ளது.


