News January 7, 2026
ஆடு, கோழிகளுக்கு உயிர் இல்லையா? SC கேள்வி

தெருநாய்கள் மேலாண்மை தொடர்பான வழக்குகளை SC விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையில், நாய்களின் உரிமைகள் குறித்து நாய் ஆர்வலர்கள் வாதிட்டபோது, மற்ற விலங்குகளின் நிலை என்னவென்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆடு, கோழிகளுக்கு உயிர் இல்லையா என்றும் காட்டமாக கேட்டனர். பள்ளிகள், ஹாஸ்பிடல்கள், கோர்ட்டுகள் உள்ளிட்ட பொது நிறுவனங்களுக்கு உள்ளே தெருநாய்களை அகற்றுவது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
Similar News
News February 13, 2026
திமுக, அதிமுகவுக்கு விஜய் Open சவால்

மற்றவர்கள் தொடங்கிய கட்சியில் இருப்பவர்கள், தன்னை போல் தனியாக நின்று 1% வாக்கு வாங்க முடியுமா என விஜய் சவால்விட்டிருக்கிறார். தன்னை அனுபவமில்லாதவர் என கூறுவதற்கு பதிலடிகொடுத்த அவர், மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதில் தங்களுக்கு அனுபவமில்லை என்றார். மேலும், கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் முதன்மையான சக்தியாக மாறி, 30%-க்கு மேல் மக்கள் ஆதரவை கொண்டிருக்கும் தவெகவுக்கு அனுபவமில்லையா எனவும் கேட்டுள்ளார்.
News February 13, 2026
BREAKING: தேர்தல் வாக்குறுதி.. விஜய் வெளியிட்டார்

நடைமுறைக்கு ஒத்துவராத வாக்குறுதிகளை என்றுமே வழங்க மாட்டேன் என விஜய் தெரிவித்துள்ளார். மக்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்குவதே தனது முதல் வாக்குறுதி என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் அனைவருக்குமான அறிக்கையாக இது அமையும் என்றும் விஜய் உறுதியளித்துள்ளார். ஏற்கெனவே, பைக், வீடு என தவெக வாக்குறுதி அளித்திருந்தது.
News February 13, 2026
எனக்கான Cute Videos-ஐ பார்த்தேன்: விஜய்

சிறுவர்களின் எதிர்காலத்திற்காகவும் தான் கட்சி ஆரம்பித்ததாக விஜய் தெரிவித்தார். தனக்காக பெற்றோர்களிடம் சிறுவர்கள் வாக்கு சேகரிக்கும் Cute Video-களை பார்த்ததாக கூறிய அவர், அனைவரிடமும் இதையே செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார். மேலும், யார்மீதும் தனிப்பட்ட வன்மமோ, கோபமோ இல்லை எனவும், தேர்தலில் ஜெயித்து மக்களுக்கான நன்றிக் கடனை செலுத்தவே அரசியலுக்கு வந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


