News August 2, 2024
ஆடிப்பெருக்கு முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் நிர்வாகத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் மணிவாசன் மற்றும் பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News October 22, 2025
திருச்சி: திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (அக்.23) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மணிகண்டம் ஒன்றியம் கோனார் சத்திரம், திருவெறும்பூர் ஒன்றியம் வாழவந்தான் கோட்டை, புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம், தொட்டியம் ஒன்றியம் காடுவெட்டி, உப்பிலியபுரம் ஒன்றியம் கோட்டப்பாளையம் ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
திருச்சி: இந்திய அஞ்சல் துறையில் வேலை

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், IPPB வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
7. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க
News October 22, 2025
திருச்சி மாவட்டத்தில் 975.5 மி.மீ பதிவு

திருச்சி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் தொடர்ச்சியாக கனமழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது அதேநேரம், திருச்சி பொன்னணிஆறு அணை பகுதியில் அதிகபட்சமாக 129.4 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 975.5 மி.மீ மழையும், சராசரியாக 40.65 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.