News April 5, 2025

ஆடிட்டரிடம் ரூ.1 கோடி பறித்த இன்ஸ்பெக்டர் கைது

image

தஞ்சையைச் சேர்ந்த ஆடிட்டர் ரவிச்சந்திரன் என்பவர் அவருக்கு சொந்தமான 80 சென்ட் இடத்தில் அவர் வளர்த்த 30 தேக்கு மரங்களை அனுமதியின்றி வெட்டியதாக பதியப்பட்ட வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதாகக் கூறி, தர்மபுரியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் அரியலூரைச் சேர்ந்த நெப்போலியன் என்பவர் ரூ.1 கோடி பணத்தை ஏமாற்றி பெற்றதாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Similar News

News April 5, 2025

அரியலூரில் மின்நுகர்வோர் சிறப்பு முகாம்

image

அரியலூர் மாவட்டத்தில் மின்நுகர்வோர் சிறப்பு குறைதீர் கூட்டம் இன்று (ஏப்.05) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. அதில் மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம். மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்வாரிய இயக்கம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர்கள் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறும்.

News April 4, 2025

இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் இரவு நேரங்களில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஏப்ரல் – 4) இரவு ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு எண்கள், அரியலூர் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

News April 4, 2025

அரியலூரில் ஏப்.14 ஜல்லிகட்டு 

image

அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூர் கிராமத்தில் வரும் ஏப்.14ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளது. மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளவுள்ள மாடுகள் , மாடுபிடி வீரர்கள் , மாட்டின் உரிமையாளர்கள் ஆகியோரது விவரங்கள் ariyalur.nic.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

error: Content is protected !!