News January 3, 2026
ஆடாமல் ஜெயித்த பாஜக!

MH மாநகராட்சி தேர்தல் வரும் 15-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், 68 இடங்களில் ‘பாஜக கூட்டணி’ போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. மும்பை, புனே, ஜல்கான், கல்யாண் உள்ளிட்ட 8 மாநகராட்சிகளில் 68 இடங்களில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதை ‘ஆடாமலேயே வெற்றி’ என பாஜகவினர் கொண்டாடுகின்றனர். ஆனால், ED, CBI மூலம் வெற்றியை விலைக்கு வாங்கியது மிகவும் கேவலமானது என உத்தவ் சிவசேனா சாடியுள்ளது.
Similar News
News January 21, 2026
நடிகர் கமல் ராய் காலமானார்

மலையாள நடிகரும், நடிகை ஊர்வசியின் சகோதரருமான கமல் ராய் (54) மாரடைப்பால் சென்னையில் காலமானார். தமிழில் ‘புதுசா படிக்கிறேன் பாட்டு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், சாயுஜ்யம், கொல்லிலக்கம், மஞ்சு, கிங்கினி, கல்யாணசௌகாந்திகம், வச்சலம், ஷோபனம், தி கிங் மேக்கர் மற்றும் லீடர் உள்ளிட்ட மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News January 21, 2026
தப்புக் கணக்கு போட்டாரா செங்கோட்டையன்?

அதிமுக ஒருங்கிணைப்பு முயற்சி கை கொடுக்காமல் போனதால் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். ஆனால், தற்போது NDA கூட்டணியில் இணைந்த <<18913412>>TTV தினகரனை<<>> EPS வரவேற்றுள்ளார். அதேபோல, NDA கூட்டணியில் OPS மீண்டும் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், செங்கோட்டையன் அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
News January 21, 2026
உலகளவில் 3-ம் இடம்: இந்திய விஸ்கியின் விலை ₹10 லட்சம்!

2025-26-ம் ஆண்டுக்கான உலகின் மிகச்சிறந்த விஸ்கி பிராண்டுகளை Jim Murray’s Whisky Bible பட்டியலிட்டுள்ளது. உலகம் முழுவதும் 4,000 விஸ்கி பிராண்டுகளை ஆய்வு செய்து இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், உலகின் நம்பர் 1 இடத்தை அமெரிக்காவின் ‘Full Proof 1972 Bourbon’ பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் ‘The Expedition (15 year Old Single Malt)’ 3-ம் இடத்தில் உள்ளது. இதன் விலை ₹10 லட்சமாகும்.


