News March 30, 2025
ஆசை ஆசையாய் வாங்கிய கார்- தற்கொலையில் முடிந்த சோகம்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் முருங்கை கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் என்ற இளைஞர் கடன் மூலம் கார் வாங்கி ஆசை ஆசையாய் ஓட்டி வந்தார். ஒருகட்டத்தில் தவனை தொகையை செலுத்த முடியாததால் மன உளைச்சலில் இருந்த அவர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து 27ம் தேதி தற்கொலை முயற்சி செய்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலை எதற்கும் தீர்வல்ல.
Similar News
News April 1, 2025
குளத்தில் நீராடினால் நோய்கள் தீரும் அதிசயம்

செங்கல்பட்டு, திருநீர்மலை அருகே அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள் கோவிலில் மூலவராக உலகளந்த பெருமாள் அருள் பாலித்து வருகிறார். இக்கோவில் குளத்தில் நீராடினால் நோய்கள் தீரும், திருமண தடை அகலும். மேலும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு உள்ள மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்பது பக்க்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News April 1, 2025
சோதனை செய்த பிறகே தர்பூசணியை வாங்குங்கள்

கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.
News April 1, 2025
ரசாயனம் கலந்த தர்பூசணியா? ஒரு டிஷ்யூ பேப்பர் போதும்

ரசாயனங்களை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலமாக தர்பூசணி பழங்களுக்குள் செலுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் அண்மையில் தெரிவித்தார். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் சிவந்து போய் இருக்கும். அதன் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்கும்போது, டிஷ்யூ பேப்பர் மீது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து இருந்தால் அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது.