News March 10, 2025
ஆசிரியர் வீட்டில் இருந்த 27 பவுன் தங்க அபேஸ்

கரூர், குளித்தலை அண்ணாநகர் தெருவை சேர்ந்தவர் அன்பழகி 51. இவர் லாலாபேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக உள்ளார். கடந்த 5ம் தேதி அன்று வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு திறக்கப்பட்டுள்ளது. சந்தேகம் அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது சூட்கேசில் வைத்திருந்த 27 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரிய வந்தது. குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிவு.
Similar News
News August 24, 2025
கரூரில் கரண்ட் பில் அதிகமா வருதா?

கரண்ட் பில் கட்டணம் அதிகமா வருதா? கவலையை விடுங்க இது போன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்..!
News August 24, 2025
கரூர்: சிலிண்டர் டெலிவரிக்கு அதிக பணம் கேட்கிறார்களா?

கரூர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகார் அளியுங்கள். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க!
News August 24, 2025
கஞ்சா விற்பனை குறித்து தொடர்பு கொள்ளவும்!

கரூர் நகர காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தால் சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யாரேனும் கஞ்சா போதை பொருட்களை விற்றாலோ, வைத்திருந்தாலோ, கீழ்கண்ட தொலைபேசி எண்களுக்கு தகவல் தருமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் காவல் துறை ஆய்வாளர் 99429-04717 சார்பு ஆய்வாளர் 94981-61773 ஆகிய எண்களில் புகார் கொள்ளலாம்.