News December 26, 2025

ஆசிரியர் டூ அரசியல்: GK மணியின் அரசியல் பாதை (1/2)

image

சாதாரண ஆசிரியராக பணியை தொடங்கி இன்று ஒரு அரசியல் கட்சியின் முக்கிய தலைவராக வளர்ந்திருப்பவர்தான் ஜி.கே.மணி. வன்னியர் சங்கம் தொடங்கப்படுவதற்கு முன்பாக SSS என்றழைக்கப்பட்ட சங்கத்தில் இணைந்து படிப்படியாக உயர்ந்தவர் GKM. 1984-ல் ராமதாஸ் கையால் தியாகச் செம்மல் விருதை பெற்றார். பாமக தொடங்கப்பட்டபோது இவருக்கு தொண்டர் அணித் தலைவர் பதவிதான் முதல்முதலில் கிடைத்தது. <<18674838>>Click Here<<>> for Part-2.

Similar News

News December 26, 2025

பள்ளி மாணவர்களுக்கு ₹10,000.. உடனே விண்ணப்பிக்கவும்!

image

முதல்வர் திறனாய்வுத் தேர்வுக்கு 10-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் (டிச.26) நிறைவடைகிறது. ஜன.31-ல் தேர்வு நடைபெற உள்ள நிலையில், உடனே விண்ணப்பிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியான 1,000 மாணவர்களுக்கு, ஒரு கல்வியாண்டுக்கு தலா ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும். <>www.dge.tn.gov.in<<>> தளத்தில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்யலாம். SHARE IT.

News December 26, 2025

கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

image

கனடாவில் மருத்துவம் பயின்று வந்த இந்திய மாணவர் ஷிவாங்க் அவஸ்தி, Toronto Scarborough பல்கலை.,-க்கு அருகே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய தூதரகம், அவஸ்தியின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. கனடாவில் இந்த ஆண்டின் 41-வது கொலை சம்பவம் இது என்பதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

News December 26, 2025

மோசடியில் சிக்கினார் ஜிவி பிரகாஷ்

image

சைபர் கிரிமினல்களின் மோசடி வலையில் தற்போது பிரபலங்களும் சிக்க தொடங்கியுள்ளனர். தாயின் இறுதிச்சடங்கிற்கு பணம் தேவை என SM-ல் கேட்டவருக்கு ஜிவி பிரகாஷ் ₹20,000 அனுப்பி உதவியுள்ளார். ஆனால், அந்த நபர் 5 ஆண்டு பழைய போட்டோவை பயன்படுத்தி ஏமாற்றியது தெரியவந்தது. பணத்தின் மீதான ஆசையில் தாய் இறந்ததாக கூறிய அந்த அருவருப்பான நபரை போலீஸ் கைது செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்துகின்றனர்.

error: Content is protected !!