News January 2, 2026
ஆசிரியர்கள் மீது தாக்குதல்: அன்புமணி கண்டனம்

பாமக தலைவர் அன்புமணி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “சமவேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், நேற்றைய (ஜன.01) போராட்டத்தின்போது ஆசிரியர்கள் சிலரை காவலர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். நீதி கேட்டு போராடும் ஆசிரியர்கள் மீது திமுக அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது” என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News February 2, 2026
பெசன்ட் நகர் கடற்கரையில் மிளிர்ந்த ‘with Love’

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் with love படக் குழுவினர் படத்தை பிரபலப்படுத்தும் வகையிலும் அனைவரும் கவரும் வகையிலும் புதிய ட்ரென்டிங்கான ஆகாய ட்ரோன் ஷோ ஒன்றை நடத்தினர். மேலும் விடுமுறை நாளான நேற்று பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்த மக்கள் வானில் ‘with Love’ என்ற வடிவில் பறந்த ட்ரோன்கள் கண்டு வியந்தனர்.
News February 2, 2026
சென்னை அருகே வீட்டிற்குள் புகுந்த பேருந்து

திருத்தணியில் இருந்து பொதட்டூர்பேட்டை நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து கிருஷ்ணசமுத்திரம் பஸ் நிறுத்தம் அருகே சாலை வளைவில் திரும்ப முயன்று. அப்போது எதிரே கரும்பு ஏற்றி கொண்டு டிராக்டர் வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். மேடான சாலை என்பதால் பின்னோக்கி வந்த பேருந்து முரளி என்பவரின் வீட்டிற்குள் புகுந்தது. நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
News February 1, 2026
சென்னை: சிலிண்டர் புக் பண்ண புது வழி!

நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க.


