News June 15, 2024

ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

image

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சேலம் மாவட்டம் சார்பில் கோட்டை மைதானத்தில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Similar News

News March 2, 2026

ஆத்தூரில் அருகே சோகம்: இளம்பெண் விபரீத முடிவு

image

ஆத்தூர் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த தேவி (36). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது 9-ம் வகுப்பு படிக்கும் மகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாள்களாக மனவேதனையில் இருந்து வந்த தேவி, நேற்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 2, 2026

ஆபாச நடனம்: சேலத்தில் வசமாக சிக்கிய பெண்கள்!

image

சேலம்: சேலதாம்பட்டி கோயில் விழாவில், ஆபாசமாக நடனமாடியதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக வினோத்குமார் என்பவர் அளித்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பேரில், நடனக் குழுவைச் சேர்ந்த கார்த்தி, அஸ்வினி, நிகிதா, மற்றும் ஹேமா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 1, 2026

சேலம்: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க

image

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?தயங்கமா மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0427-2450023 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.

error: Content is protected !!