News August 8, 2025
ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் வழங்கிய ஆசிரியர்களை
மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் புத்தகம் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் (பொ), மாவட்ட கல்வி அலுவலர்கள் செந்தில்குமார் (இடைநிலை), ரமேஷ் (தனியார் பள்ளிகள்) ஆகியோர் உடனிருந்தனர்.
Similar News
News August 19, 2025
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஆகஸ்ட்-18) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 80 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.
News August 18, 2025
வேலூர் விவசாயிகளுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகளை மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
வேலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

வேலூர் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். இந்த<