News April 7, 2024
ஆசிரியரை சரமாரியாக வெட்டி நகை பறிப்பு

மதுரை களிமங்களம் அரசு துவக்கபள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் லட்சுமி(58). இவர் நேற்று சேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது கருப்பாயூரணி அருகில் ஆட்டோ ஓட்டுநர், டீசல் நிரப்புவதாக கூறி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று லட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அவர் அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்துச் சென்றார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 30, 2026
மதுரை: ஜல்லிக்கட்டு காளை நீரில் மூழ்கி பலி

அலங்காநல்லூர், கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 1137 காளைகள், 505 வீரர்கள் பங்கேற்றனர். போட்டியின் போது, பாலமேட்டினை சேர்ந்தவரின் காளை தப்பி ஓடி பெரியாறு பாசன கால்வாய் கண் ஷட்டரில் விழுந்தது. நீரில் இழுத்துச் செல்லப்பட்ட காளை மூழ்கி உயிரிழந்தது. காளையை மீட்ட உரிமையாளர் அப்பகுதியில் அடக்கம் செய்தார்.
News January 30, 2026
மதுரை: மிஸ்டு கால் வழியாக சிறுமி நேர்ந்த துயரம்!

திருமங்கலத்தை சேர்ந்த சிறுமி, 10ம் வகுப்பினை பாதியில் நிறுத்தியுள்ளார். இதற்கு தாய் கண்டித்ததால் நவம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியேறினார். சிறுமிக்கு ‘மிஸ்டு கால்’ மூலம் அறிமுகமான, விருதுநகரை சேர்ந்த திருமணமான முனியாண்டி(29) உடன் கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டைக்கு சென்றார். தாயின் புகாரின் பேரில் சிறுமியை மீட்ட போலீசார், பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படும் முனியாண்டியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
News January 29, 2026
மதுரை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

மதுரை மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000449, 9445000450, 8870678220) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.


