News September 21, 2025
ஆங்கிலேய கல்வி முறை தொடர்வது வேதனை: கவர்னர்

2014-ல் மோடி PM ஆனதும் புதிய இந்தியா பிறந்ததாக கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். முந்தைய ஆட்சியாளர்களுக்கு பாக்.,கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை எனவும், ஆன்மிகம் தான் இந்த தேசத்தின் ஆன்மா என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வியாபாரத்துக்கு வந்த ஆங்கிலேயர்கள் நமது கலாச்சாரத்தை அழித்ததாகவும், சுதந்திரத்திற்கு பிறகும் அவர்களது கல்வி முறையை பின்பற்றுவது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 21, 2025
திமுக அமைச்சர்களை குறிவைத்து அடிக்கும் விஜய்

2026-ல் DMK vs TVK இடையேதான் நேரடி மோதல் என்பதை விஜய் மக்கள் மத்தியில் பரப்புகிறார். திமுக அரசின் தவறான செயல்பாடுகளையும், அவர்கள் செய்ய தவறியவற்றையும் விமர்சிக்கும் அவர், தனது பரப்புரையின்போது அந்தந்த மாவட்ட அமைச்சர்களை தாக்குவதையும் நிறுத்தவில்லை. மதுரை மாநாட்டில் மூர்த்தி, திருச்சியில், நேரு, அன்பில், அரியலூரில் சிவசங்கர், நேற்று டிஆர்பி ராஜா பெயரை குறிப்பிட்டு விஜய் அட்டாக் செய்தார்.
News September 21, 2025
கட்டுப்புடிடா பாடலின் ரகசியம் உடைத்த SJ சூர்யா

‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ பாடல் இன்றும் ஒன்ஸ்மோர் கேட்கும்படி உள்ளது மகிழ்ச்சியாக இருப்பதாக SJ சூர்யா நெகிழ்ந்துள்ளார். ‘குஷி’ பட ரீரிலீஸ் நிகழ்வில் பேசிய அவர், ‘செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும்’ என்ற கவித்துவமிக்க பாடலின் மெட்டிலிருந்தே ‘கட்டிப்புடி’ பாடலை தான் தேவாவிடம் கேட்டதாக நினைவுகூர்ந்துள்ளார். அத்துடன் விஜய் – மும்தாஜின் டான்ஸ் பாடலை மேலும் அழகாக்கியது என்றும் கூறியுள்ளார்.
News September 21, 2025
சுவாரஸ்யமான இந்தியா

இந்தியா என்பது பல அதிசயங்கள் கொண்ட நாடு. இந்தியாவைப் பற்றி அறிய பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. அதில், சிலவற்றை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. மேலும், உங்களுக்கு தெரிந்த சுவாரஸ்யமான விஷயத்தை கமெண்ட்ல சொல்லுங்க. நமது நாட்டின் பெருமையை ஷேர் பண்ணுங்க.