News August 28, 2025

ஆக.30, 31 மதுக்கடைகள் மூட உத்தரவு

image

குமரி கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- குமரியில் ஆக.30, 31ல் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடக்கிறது. இந்த ஊர்வலம் நாகர்கோவில் முதல் சொத்தவிளை கடற்கரை உட்பட 11 இடங்களில் நடைபெறுகிறது. எனவே ஊர்வலம் செல்லும் பாதைகளில் உள்ள மதுபானக் கடைகள் & எப்.எல். உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை மேற்படி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடங்கி முடியும் வரை மூட உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News November 16, 2025

குமரி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க

News November 16, 2025

குமரி: +2 படிக்கும் மகளை கர்ப்பமாக்கிய தந்தை

image

குமரி எல்லை செறியகொல்லா பகுதி தேங்காய் வியாபாரி சுரேஷின் 17 வயது மகளான +2 படிக்கும் மாணவிக்கு, 2 மாதத்திற்கு முன் திருவனந்தபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. தகவல் அறிந்த மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிறுமியின் தந்தையே மகள் என்றும் பாராமல் மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. நேற்று போலீசார்  சுரேஷை போக்சோ சட்டப்படி கைது செய்தனர்.

News November 16, 2025

தற்காலிக பாதை அமைக்கும் பணி தீவிரம்

image

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையான் கோவில் தெப்பக்குளத்தின் பக்க சுவர் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்நிலையில் இன்று தெப்பகுளத்தின் கருங்கல் சுவர்களை சரி செய்ய கட்டுமான பணிக்காக போக்குவரத்திற்கு தற்காலிக பாதை அமைக்கும்பணி
நடந்து வருகிறது. பணிகளை விரைந்து முடிக்கவும், மேலும் பழமை மாறாமல் புதுப்பிக்கவும் இந்து இயக்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

error: Content is protected !!