News October 27, 2024

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

image

அந்தியூர் அருகே உள்ள முத்து கவுண்டர் புதூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் 40 குடும்பங்களுக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்கள் 100 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட நடைபாதையை ஆக்கிரமிப்பு  செய்ததாக கூறி தங்களுக்கு நடைபாதை இல்லை அதனால் ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி இன்று கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி அந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Similar News

News February 14, 2026

ஈரோட்டிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை!

image

ஈரோடு மாவட்டத்திற்கு இன்று (14.02.2026) வருகை புரிந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி புத்தகம் வழங்கி வரவேற்றார். இந்நிகழ்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்து ஆளுநரை வரவேற்றனர்.

News February 14, 2026

ஈரோடு: FREE வீடு கட்டப் போறீங்களா?

image

ஈரோடு மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டுக்கு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE யாக செய்ய ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 14, 2026

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் முத்துசாமி!

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் மகளிருக்கு தையல் இயந்திரங்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் சு. முத்துசாமி பயனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை நேரில் வழங்கினார். இந்நிகழ்வில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

error: Content is protected !!