News May 16, 2024
ஆக்கிரமிப்பு கடைகளுக்கு போலீசார் எச்சரிக்கை

ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் வியாபாரிகள் தங்களது கடை முன் ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். இன்று காலை ஊத்துக்கோட்டை போலீசார் ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை விடுத்தனர்.
Similar News
News July 6, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News July 6, 2025
பொன்னியில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர்

இன்று மாலை பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற பாக நிலை முகவர்கள் (BLA2) ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் நாசர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி அவர்கள் பங்கேற்று கருத்துரை வழங்கினார். உடன் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ் ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News July 6, 2025
திருவள்ளூர் வானில் சர்வதேச விண்வெளி நிலையம்: நாசா தகவல்

சர்வதேச விண்வெளி மையம் பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் மணிக்கு 16முறை பூமியைச் சுற்றி வருகிறது. இந்த விண்வெளி மையத்தை சில சமயங்களில் வெறும் கண்ணால் பார்க்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 6முதல்10 வரை திருவள்ளூர் மக்கள் இரவு 8மணி முதல் 8.06மணி வரை வானில் காண முடியும் என நாசா அறிவித்துள்ளது. இது ஒரு அரிய வானியல் நிகழ்வாகும். இதை டக்குனு நண்பர்களுக்கு ஷேர் பண்ணி பாக்க சொல்லுங்க!