News January 8, 2025

ஆக்கிரமிப்புகளை அகற்ற வட்டாட்சியர் உத்தரவு

image

அருப்புக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. அருப்புக்கோட்டை நகராட்சிக்குள் சாலைகள் மற்றும் முக்கிய தெருக்களில் இருபுறமும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன.‌ இந்த ஆக்கிரமிப்புகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என அருப்புக்கோட்டை வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.‌ ஆக்கிரமிப்புகளை அகற்றாதவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் வட்டாட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News October 27, 2025

விருதுநகர்: போஸ்ட் ஆபிஸ் வங்கி வேலை அறிவிப்பு

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 348 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் ஊதியமாக ரூ.30,000 வழங்கப்படும் நிலையில் இளங்கலை பட்டப்படிப்பு படித்த 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News October 27, 2025

விருதுநகரில் நாளை மின் தடை

image

விருதுநகர் மக்களே, சாத்தூர், விருதுநகர், சிவகாசி, மல்லிபுதூர், ஆலங்குலம், சுப்பையாபுரம், கங்கரக்கோட்டை, செவல்பட்டி, வெம்பக்கோட்டை, பெரியவள்ளிக்குளம், GN பட்டி, துலுக்கப்பட்டி, அருப்புக்கோட்டை, பெரியபுளியம்பட்டி, பாளையம்பட்டி, வேலாயுதபுரம், பந்தல்குடி ஆகிய மின் நிலையங்களில் நாளை (அக். 28) காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. மேலும் அறிய <>கிளிக்<<>> செய்யுங்க. SHARE IT.

News October 27, 2025

விருதுநகர்: கண்மாயில் இளைஞர் சடலம் மீட்பு

image

விருதுநகர், ஆத்திப்பட்டியை சேர்ந்த அரவிந்த்சாமி (23) இறைச்சி வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் அக். 24 மாலையில் இருந்து வீட்டிற்கு வரவில்லை என அவருடைய தந்தை அழகுபாண்டி அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இந்நிலையில் நேற்று ஆத்திபட்டியில் உள்ள கண்மாயில் அரவிந்த்சாமி சடலமாக மிதந்து கிடந்தார். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!