News June 7, 2024

ஆக்கிரமிப்பில் இருந்த ஊராட்சிக் கிணறு மீட்பு

image

பழனி கோதைமங்கலம் ஊராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்க கிணறு அமைக்கப்பட்டிருந்தது. கிணறு மற்றும் அதனை சுற்றியுள்ள இடத்தை ராசாமணி என்பவர் நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தார். இதையடுத்து, வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி அதிகாரிகள் இன்று ஆய்வு செய்து கிணற்றை மீட்டனர். மேலும், கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துச் சென்று ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

Similar News

News January 30, 2026

ஆத்தூர்: ரூ.10 லட்சம் வழங்கிய அமைச்சர்

image

ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் கடந்த டிசம்பர் 9-ம் தேதி வனப்பகுதி அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக காட்டுமாடு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது குடும்பத்தின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, நேற்று அமைச்சர் ஐ.பெரியசாமி, முருகனின் மனைவி ராக்கம்மாளிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

News January 30, 2026

திண்டுக்கல்: இனி What’s App மூலம் ஆதார் அட்டை

image

திண்டுக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 30, 2026

பழனி போறீங்களா?

image

பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை வரும் பக்தர்கள் எளிதாக வழி கண்டறிய, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் புதிய QR கோடு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் செல்போன் மூலம் இந்த QR கோடை ஸ்கேன் செய்தால், அவர்கள் செல்ல வேண்டிய பாதைகள், குடிநீர் வசதி, மருத்துவ முகாம்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கான வழிகாட்டி வரைபடம் (Map) உடனடியாகத் திரையில் தோன்றும். (ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!