News August 14, 2024

அஸ்வத்தாமனிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை 2/2

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்கை துப்பாக்கியை காட்டி மிரட்டியது உண்மையா? கொலையாளிகளை ஒருங்கிணைத்தது எப்படி? அவர்களுக்கு பணம் எப்படி விநியோகிக்கப்பட்டது? கொலையாளிகளை சிறையில் சந்தித்து நாகேந்திரன் கொலை திட்டம் தீட்டினாரா? கொலையில் அரசியல் பின்புலம் உள்ளதா? என கேள்வி கேட்டு போலீசார் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்.

Similar News

News August 21, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று எங்கெல்லாம் நடைபெறும்?

image

சென்னை மாநகராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று (ஆகஸ்ட் 21) 9 வார்டுகளில் நடைபெறவுள்ளது. திருவொற்றியூர் (வார்டு-10, பூந்தோட்டம்), தண்டையார்பேட்டை (வார்டு-48, மின்ட்), இராயபுரம் (வார்டு-58, சிடன்ஹாம்ஸ் சாலை), அம்பத்தூர் (வார்டு-80, சூரப்பேட்டை), தேனாம்பேட்டை (வார்டு-117, மெலனி சாலை), கோடம்பாக்கம் (வார்டு-141, சி.ஐ.டி. நகர்) ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க!

News August 20, 2025

சென்னையில் நாளை கரண்ட் கட்!

image

சென்னையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆகஸ்ட் 21) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கரணை மீனாட்சி நகர், பெரும்பாக்கம் கைலாஷ் நகர், ஆண்டனி நகர், புளியந்தோப்பு பவுடர் மில்ஸ் ரோடு, வீராசெட்டி தெரு, திருவான்மியூர் சாஸ்திரி நகர், அடையாறு இந்திரா நகர் 1 முதல் 3வது பிரதான சாலை, கஸ்தூரிபாய் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்படும். ஷேர்!

News August 20, 2025

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி விடுமுறை தினங்களான ஆக.23, 24 ஆகிய தேதிகளை முன்னிட்டு 1,040 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து தி.மலை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களுக்கு வெள்ளியன்று 340 பேருந்துகளும், சனியன்று 350 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. திருப்பூர், கோவை & ஈரோட்டிலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

error: Content is protected !!