News August 14, 2024
அஸ்வத்தாமனிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை 1/2

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எந்த விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங் உடன் மோதல், எத்தனை ஆண்டுகளாக ஆம்ஸ்ட்ராங் உடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது? நாகேந்திரன் சிறையில் இருந்தபடியே ஆம்ஸ்ட்ராங்கை மிரட்டியது உண்மையா? எத்தனை முறை ஆம்ஸ்ட்ராங் உடன் இடம் தொடர்பான பஞ்சாயத்து நடந்துள்ளது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Similar News
News November 12, 2025
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

திருவள்ளுர் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் வரும் நவ.14ஆம் தேதியன்று காலை 10.00 மணிக்கு திருவள்ளுர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
News November 12, 2025
திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் பிரதமரின் கௌரவ நிதி உதவி பெரும் தனித்துவ அடையாள எண் பெறாமல் உள்ளனர். வரும் (நவ-15) ஆம் தேதிக்குள் தங்களது நில உடமை விவரங்கள், ஆதார், கைப்பேசி எண் ஆகிய விவரங்களை அளித்து, எவ்வித கட்டணமுமின்றி விவசாயிகள் பதிவு செய்து அடையாள எண் பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
அறிவித்தார் திருவள்ளூர் கலெக்டர்!

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் (நவ-14) அன்று காலை 10 மணி முதல் மாலை 3 வரை சிறு அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொள்ள உள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தனியார்துறை இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


