News December 20, 2025
அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்து சேவை செய்தவர்களுக்கு “அவ்வையார் விருது” மார்ச் 8 அன்று வழங்கப்படுகிறது. இந்த விருதை பெற தகுதி உடையவர்கள் https://awards.tn.giv.in என்ற இணையதளத்தின் வாயிலாக 31.12.2025-க்குள் பதிவு செய்து வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இணையத்தில் பதிவு செய்த ஆவணங்கள் கையேடாக மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஜன.3க்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News December 22, 2025
தேனியில் நாளை இங்கெல்லாம் மின் தடை!

வீரபாண்டி, கண்டமனூா் துணை மின் நிலையங்களில் நாளை (டிச.23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பாா்பட்டி, சடையால்பட்டி, கண்டமனூா், அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்கபுரம், தப்புக்குண்டு, கோவிந்தநகரம் (ம) அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
News December 22, 2025
தேனி: டிகிரி போதும்., BOI வங்கியில் ரூ.1,20,940 சம்பளத்தில் வேலை!

தேனி மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 5க்குள் இங்கு<
News December 22, 2025
தேனி: தந்தை கண்டித்ததால் மகள் தற்கொலை!

ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித். இவரது மகள் சுஷ்மிதா (21) தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் அடிக்கடி செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இதனை அவரது தந்தை ரஞ்சித் கண்டித்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் நேற்று (டிச.21) சுஷ்மிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


