News December 7, 2024
அவ்வையார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட நபர்களுக்குஆண்டு தோறும் வழங்கப்படும் ஔவையார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தன்று சென்னையில் முதலமைச்சரால் இந்த விருது வழங்கப்பட உள்ளது . https://awards.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News August 21, 2025
BREAKING: நள்ளிரவில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

மேலப்பாளையம் மேல கருங்குளத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி அருள்தாஸ், தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் நேற்று இரவு மண்ணெண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்த மண்ணென்ணையை பறிமுதல் செய்தனர். எங்கள் ஊரில் சாதி ரீதியாக எங்கள் குடும்பத்தை அச்சுறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் மறுக்கின்றனர் என அருள்தாஸ் போலீசாரிடம் கூறினார்.
News August 21, 2025
பண மோசடி குறித்து நெல்லை காவல் துறை எச்சரிக்கை

வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, பிக்சட் டெபாசிட் மற்றும் கடன்கள் தொடர்பான OTP விவரங்களைக் கேட்கும் மோசடி அழைப்புகள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் இத்தகைய அழைப்புகளுக்கு எந்த தகவலையும் அளிக்க வேண்டாம் என்றும், உடனடியாக அழைப்பை துண்டித்துவிட்டு, அருகில் உள்ள வங்கிக்கு நேரடியாக சென்று உறுதி செய்ய வேண்டும் என்றும் நெல்லை SP சிலம்பரசன் எச்சரித்துள்ளார்.
News August 20, 2025
நெல்லையில் அரசு பள்ளி மாணவனின் சாதனை

திருநெல்வேலி அரசு மாதிரிப் பள்ளியில் படித்த மாணவர் மணிகண்டன், 7.5% இட ஒதுக்கீடு இல்லாமல், நீட் தேர்வில் 522 மதிப்பெண்கள் பெற்று, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளார். அரசுப் பள்ளியில் படித்து, தனது சொந்த முயற்சியால் இந்தச் சாதனையைப் படைத்த தமிழ்நாட்டின் ஒரே மாணவர் இவரே. இவரின் இந்த வெற்றி, பலருக்கும் உத்வேகம் அளிக்கும்.