News March 30, 2025
அவிநாசி புதிய நகராட்சி

அவிநாசி புதிய நகராட்சியாக உருவாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையின் பேரில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, போளூர், செங்கம், கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி உள்ளிட்ட 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசிதழை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Similar News
News January 25, 2026
திருப்பூர் அருகே அதிரடி கைது!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பகுதியில், பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட இரண்டு பேரை மூலனூர் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 25, 2026
பல்லடத்தை சேர்ந்த இளம்பெண் தற்கொலை!

பல்லடத்தைச் சேர்ந்தவர் ஜீவிதா(25). எம்பிபிஎஸ் முடித்துள்ளார். இவருக்கும் கோவை தென்னமநல்லூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அபிஷேக்குக்கும் பழக்கமாகி காதலாகி கடந்த 12 நாள்களுக்கு முன் காதல் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் ஜீவிதா மருத்துவம் படித்திருந்தாலும் உரிய வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 25, 2026
திருப்பூரில் பலத்த சோதனை

நாடு முழுவதும் 77வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின நிகழ்ச்சிக்கான பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரக்கூடிய நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகள் பலத்த சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


