News May 14, 2024

அவிநாசி அருகே கிணற்றில் மிதந்த சடலம்

image

அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் கானாங்குளம் வையாபுரி கவுண்டன் தோட்டத்தை சேர்ந்தவர் செல்லப்பன் மகன் பரமசிவம் ( 47). இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கனவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரமசிவத்தை யாரும் பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இன்று அவர் அருகே உள்ள கிணற்றில் சடலமாக மிதந்து கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News August 14, 2025

திருப்பூர்: பஸ் ஸ்டாண்டிற்க தீரன் சின்னமலை பெயர்

image

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு பகுதியில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினரின் கோரிக்கைகளை ஏற்று புதிய பேருந்து நிலையத்திற்கு தீரன் சின்னமலை வடக்கு பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

News August 14, 2025

திருப்பூர்: உங்க கிராம வரவு செலவு கணக்கை பாருங்க!

image

திருப்பூர் மக்களே தமிழகம் முழுவதும் நாளை ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகின்றது. கிராம சபைக் கூட்டத்தில் உங்கள் ஊராட்சியின் வரவு செலவு கணக்கு வாசிக்கப்படும், எனவே ஊராட்சி வரவு செலவு கணக்கில் பிழை (அ) மாற்றம் இருப்பதை கண்டறிய இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்து உங்கள் ஊராட்சியின் நிர்வாக வெளிப்படை தன்மையை காணலாம்! அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 14, 2025

திருப்பூரில் சொந்த வீடு கட்ட ஆசையா..?

image

திருப்பூரில் சொந்த வீடு கட்ட முனைபவரா நீங்கள்? பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் தாமாக வீடு கட்ட அரசு சார்பாக ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் ரூ.75,00,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இது 8.50 சதவீதம் முதல் 9.50 சதவீதம் வரை வட்டி விகீதத்தில் வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!