News April 1, 2025
அவசர உதவி வாட்ஸ் அப் எண் அறிவிப்பு – கலெக்டர் தகவல்

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள், இதர சேவைகள் & அவசரகால உதவிகள் குறித்து பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க செல்போன் அல்லது வாட்ஸ் அப் “வணக்கம் நெல்லை” என்னும் செல்போன் எண் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 97865 66111 எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தீர்வு பெறலாம் என கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்துள்ளார். *எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க*
Similar News
News April 3, 2025
நெல்லை: இரவு ரோந்துப்பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [ ஏப்ரல்.2 ] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் அஜிக்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 2, 2025
குளத்தில் குளித்த +2 மாணவர் நீரில் மூழ்கி பலி

செண்பகராமநல்லூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் திவாகர் (வயது-17) பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். இந்த நிலையில் அங்குள்ள குளத்திற்கு இன்று நண்பர்களுடன் காலை குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கினார். நண்பர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மூலக்கரைப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News April 2, 2025
நெல்லைக்கு கன மழை எச்சரிக்கை

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள் (ஏப்.4) அன்று நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. *உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்*