News November 7, 2025
அழகே பொறாமைப்படும் பேரழகுக்கு ஹேப்பி பர்த்டே!

நிஜத்தில் ராணிகள் இப்படிதான் இருந்திருப்பார்களோ என என்னும் வகையில் ரசிகர்களை வியக்க வைத்த ‘ஸ்வீட்டி’ அனுஷ்காவுக்கு இன்று ஹேப்பி பர்த்டே. அருந்ததி ஜக்கம்மாவாக, வானம் சரோஜாவாக, பாகுபலி தேவசேனாவாக நடிப்பில் மட்டும் மிரட்டாமல், தனது அழகாலும் திரையில் ஓவியமாக நின்றார். அனுஷ்கா நடித்ததில் உங்களுக்கு பிடித்த படத்தை கமெண்ட் பண்ணுங்க?
Similar News
News February 15, 2026
இவர்களுக்கு ₹2,000 கிடைக்காது.. இதான் காரணம்

PM கிசான் திட்டத்தின் கீழ் 22-வது தவணைத்தொகை ₹2,000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் சில சிக்கல்கள் ஏற்படலாம். வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்கவில்லை என்றாலோ, e-KYC-ஐ முழுமையாக முடிக்கவில்லை, Unique ID-ஐ பெறவில்லை என்றாலோ இந்த தொகை கிடைக்காமல் போகலாம். எனவே, வட்டார வேளாண் உதவி இயக்குநர் ஆபிசில் நில ஆவணங்கள், சிட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை வழங்கி Unique ID பெறுங்கள்.
News February 15, 2026
இன்று இரு அணிகளும் கைகுலுக்குவார்களா?

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து IND அணி வீரர்கள், PAK அணி வீரர்களுடன்<<17724089>> கை குலுக்குவதை<<>> தவிர்த்தனர். அது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், இன்று T20I WC தொடரில், இவ்விரு அணிகளும் கைகுலுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த கேள்விக்கு, டாஸ் போடும் போது பார்க்கலாம் என IND கேப்டன் SKY தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், PAK கேப்டன் சல்மான் அகாவும் போட்டியின் போது பார்க்கலாம் என கூறினார்.
News February 15, 2026
BREAKING: அதிமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்தார்

அதிமுக(NDA) கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்துள்ளது. சேலத்தில் EPS-ன் இல்லத்தில் அவரை சந்தித்த AIPDP(ஆல் இந்தியா பீப்பிள் டெவலெப்மெண்ட் பார்ட்டி) நிறுவனரும், தலைவருமான PS மாரிச்செல்வம் 2026 தேர்தலுக்கான ஆதரவு கடிதத்தை வழங்கினார். தென் மாவட்டத்தில் குறிப்பிட்ட சமூக வாக்குகளைக் கொண்டுள்ள இந்த AIPDP-ன் ஆதரவு என்பது NDA கூட்டணிக்கு பக்க பலமாகப் பார்க்கப்படுகிறது.


