News April 8, 2025
அழகர் கோவில் சித்திரை திருவிழா செய்தி குறிப்பு வெளியீடு

மதுரையில் சித்திரரை திருவிழாவை முன்னிட்டு வரும் 27ம் தேதி காலை 6 மணிக்குமேல் 7 மணிக்குள் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் வைத்து சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்த விழா மற்றும் ஆயிரம் பொன் சப்புரம் தலையங்கம் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளன. தொடர்ந்து மதியம் 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் மதுரை,வண்டியூர் வைகையாற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்திலும் கொட்டகை முகூர்த்த விழா நடைபெறவுள்ளது.
Similar News
News November 2, 2025
மதுரை: வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 2 ஆயிரம் க.அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 நாட்களுக்கு அணையில் உள்ள 7 சிறிய மதகுகள் வழியாக 772 மி. க.அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் திறப்பால் தேனி, மதுரை, சிவகங்கை மாவட்ட வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News November 2, 2025
மதுரைக்கு கிடைத்த முதலிடம்: மக்கள் வேதனை

மத்திய அரசின் தூய்மை இந்தியா (Swachh Bharat) திட்டத்தின் கீழ் 2025-ம் ஆண்டுக்கான இந்தியாவில் அசுத்தமான 10 நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மதுரை முதலிடத்தில் உள்ளது. சென்னை 4-ம் இடத்தில் உள்ளது. திட்டமிடப்படாத விரிவாக்கம், மோசமான கழிவு மேலாண்மை, சுகாதார அலட்சியம் ஆகியவற்றை கொண்டு இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அகமதாபாத், போபால், லக்னோ ஆகியவை தூய்மை நகரங்கள் இடத்தை பிடித்துள்ளன.
News November 2, 2025
மதுரையில் அடுத்தடுத்து நகை பறிப்பு

மதுரை ஆரப்பாளையம், SS காலனி பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் (70) வீட்டில் தனியாக இருந்த போது அங்கே மர்மநபர், பேச்சியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்து சென்றார். இதேபோல, மதுரை பைபாஸ்ரோடு பகுதியில் வங்கி மேலாளர் சக்திவேல் மனைவி லட்சிகாவிடம் டூவீலரில் வந்த 2 மர்மநபர்கள் 9 பவுன் நகையை பறித்தனர். ஒரேநாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த நகை பறிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


