News January 10, 2026

அழகர்கோவில் அருகே கிடந்த ஆண் சடலம்

image

அழகர்கோவில் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள மேல்நிலைத் தொட்டி கீழே, சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக அ.வலையப்பட்டி விஏஓ விக்னேஷ் அப்பன்திருப்பதி போலீசில் புகார் செய்தார். அப்பன்திருப்பதி போலீசார் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார் ? எந்த ஊர்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 30, 2026

மதுரை: பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் சடலம்

image

மதுரை, யாகப்பா நகரை சேர்ந்தவர் மோகன்(59). இவர் மனைவி இறந்த நிலையில் (குழந்தைகள் இல்லாதவர்) வழிப்பு, மூல நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரது அண்ணன் கணேசன் வீட்டில் தங்கியிருந்தார். அண்ணன் வீட்டார் குடும்பத்துடன் சென்னை சென்ற நிலையில் பூட்டியிருந்த வீட்டில் துர்நாற்றம் வீசியது. இந்த புகாரின் பேரில் போலீசார் கதவை உடைத்து பார்த்த போது மோகன் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.

News January 30, 2026

மதுரை: வாகனங்களில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா?

image

வாகன உரிமையாளர் வாகனத்தை விற்க, பரிசளிக்க or மரணத்திற்குப் பின் உரிமை மாற்ற விரும்பினால், வாகன வகைக்கு ஏற்ப RTO அல்லது STA மூலம் உரிமை மாற்றம் செய்யலாம். ஆம்னி பஸ் தவிர அனைத்திற்கும் RTO அதிகாரம் உடையது. உரிமையாளர் மரணமடைந்தால், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் & NOC அவசியம். செகண்ட் ஹாண்ட் வாகனங்கள் 14 நாட்களுக்குள் உரிமையாளர் பெயர் மாற்றம் செய்வது கட்டாயம். பெயர் மாற்றம் செய்ய <>CLICK<<>> *ஷேர் பண்ணுங்க.

News January 30, 2026

மதுரை: ஜல்லிக்கட்டு காளை நீரில் மூழ்கி பலி

image

அலங்காநல்லூர், கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 1137 காளைகள், 505 வீரர்கள் பங்கேற்றனர். போட்டியின் போது, பாலமேட்டினை சேர்ந்தவரின் காளை தப்பி ஓடி பெரியாறு பாசன கால்வாய் கண் ஷட்டரில் விழுந்தது. நீரில் இழுத்துச் செல்லப்பட்ட காளை மூழ்கி உயிரிழந்தது. காளையை மீட்ட உரிமையாளர் அப்பகுதியில் அடக்கம் செய்தார்.

error: Content is protected !!