News December 8, 2024
அழகர்கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம்

மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தியுடன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கருப்பணசாமி சன்னதியில் அரிவாள் காணிக்கை செலுத்தினார். நடிகர் சிவகார்த்திகேயனை கண்டதும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
Similar News
News March 6, 2026
மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், ஜிப்மர், இஎஸ்ஐ நிறுவனங்களில் நர்சிங் அதிகாரி பணியிடங்களுக்கு நர்சிங் அதிகாரி ஆட்சேர்ப்பு பொது தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியானது. மொத்தம் 2551 பணியிடங்கள்; இதில் மதுரை எய்ம்ஸ்-ல் 30 இடங்கள் உள்ளன. (GNM டிப்ளமோ அல்லது B.Sc Nursing தகுதி வேண்டும். வயது 18–30. சம்பளம் ரூ.9,300–34,800. கணினி வழித்தேர்வு) கடைசி தேதி 16.03.2026. <
News March 6, 2026
மதுரை: வயலுக்குள் கவிழ்ந்த அரசு பஸ்

வாடிப்பட்டியில் இருந்து சோழவந்தான் செல்லும் பாதையில் அரசு பஸ் டிப்போ அமைந்துள்ளது. காலை டிரைவர் மகாலிங்கம் பஸ்சை எடுத்து வெளியே வந்தவர் நிறுத்திவிட்டு சாமி கும்பிட கீழே இறங்கி உள்ளார். எஞ்சின் ஓடி கொண்டிருந்ததால் பஸ் தானாக கிளம்பி எதிரே இருந்த தடுப்பு சுவரை தாண்டி வயல்வெளியில் தலைகீழாக கவிழ்ந்தது. டெப்போவில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக கிரைன் மூலம் பஸ்சை வெளியில் எடுத்தனர்.
News March 5, 2026
மதுரை : வீடு, நில பத்திர உங்க PHONE-ல் பெறுவது எப்படி..?

மதுரை மக்களே, இங்கு <


