News January 3, 2026
அழகம்மா அனுபமா பரமேஸ்வரன்

பாரம்பரியம் மற்றும் மார்டன் லுக் என இரண்டிலும் அழகாக வலம் வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், இன்ஸ்டாவில் லேட்டஸ்ட் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அவரது போட்டோக்களை பார்த்து பூக்களின் வாசம் நீயோ, பூங்குயில் பாஷை நீயோ, பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்கின்றனர். இந்த போட்டோக்கள் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
Similar News
News January 5, 2026
இது வாழ்வா சாவா தேர்தல்: அமித்ஷா

பொங்கலுக்குள் மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என தமிழக பாஜகவினருக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. DMK கூட்டணியில் அல்லாத கட்சிகளை, NDA கூட்டணியில் இணைத்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட அவர் அறிவுறுத்தியுள்ளாராம். திமுகவின் ஊழல்களை எல்லா வகையிலும் மக்களிடம் அம்பலப்படுத்துங்கள் என கூறியதாகவும், இது தமிழகத்தில் NDA-வுக்கு வாழ்வா சாவா தேர்தல் என்று அவர் குறிப்பிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
News January 5, 2026
மகளை கர்ப்பமாக்கிய தந்தை… அதிரடி தண்டனை

எந்த மகளுக்கும் நடக்கக்கூடாத கொடுமை, நெல்லை வள்ளியூரை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு நடந்துள்ளது. மகள் என்றும் பாராமல் தந்தையே அவரை ரேப் செய்து கர்ப்பமாக்கியுள்ளார். இதுகுறித்து போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கோர்ட் விசாரித்து வந்தது. இதனிடையே, சிறுமிக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் DNA மாதிரி மூலம் தந்தை தான் குற்றவாளி என உறுதியானதால், அந்த கொடூரனுக்கு கோர்ட் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது.
News January 5, 2026
அமித்ஷாவுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது ஏன்?

கோயில்களில் பரிவட்டம் கட்ட 2 காரணங்கள் உள்ளன. ஒன்று, விழாக்கால பூஜைகளின் போது பெரும் பதவிகளை வகிப்பவர்களுக்கு பரிவட்டம் கட்டப்படும். அல்லது, அந்த பூஜையை நடத்த நன்கொடையளித்த குடும்ப தலைவருக்கு பரிவட்டம் கட்டப்படுகிறது. பரிவட்டம் கட்டப்பட்டால் அந்நபருக்கே அனைத்திலும் முதல் மரியாதை வழங்கப்படும். இதனால் தான் ஸ்ரீரங்கத்தில் மரியாதை நிமித்தமாக அமித்ஷாவுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது.


