News January 12, 2026
அல்சர் குணமாக அருமையான வீட்டு வைத்தியம் இதோ!

எந்த வைத்தியம் பார்த்தாலும் அல்சர், நெஞ்செரிச்சல் பிரச்னை சரியாகவில்லையா? இதனை சரிசெய்ய எளிமையான வழி இருக்கிறது. 2 வெண்டைக்காயை உப்பு தண்ணீரில் கழுவி, அதை வெட்டி இரவு முழுவதும் தண்ணீரில் போட்டு வையுங்கள். தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 100ml அளவு அதை குடிக்க வேண்டும். இதை தினமும் செய்துவர அல்சர் பிரச்னைகள் நீங்கும் என சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE பண்ணுங்க.
Similar News
News February 4, 2026
விஜய்யை நடிகராகவே பார்க்கும் மக்கள்: குஷ்பு

தவெக கட்சி கூட்டத்தில் விஜய் நடனமாடியது குறித்த கேள்விக்கு குஷ்பு பதில் அளித்துள்ளார். அதில் விஜய்யை மக்கள் நடிகராகவே பார்ப்பதாகவும், இதுவரை அவரை தலைவராக பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார். அரசியல் மேடைக்கு என்று ஒரு நாகரிகம் உள்ளது என குறிப்பிட்ட அவர், அதேசமயம் மேடையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது விஜய்யின் தனிப்பட்ட விரும்பம் என்பதால் அதில் கருத்து சொல்ல முடியாது எனவும் கூறியுள்ளார்.
News February 4, 2026
H.ராஜாவை நேரில் காண ஹாஸ்பிடல் விரைந்தார் EPS

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் சென்னை அப்போலோ ஹாஸ்பிடலுக்கு EPS விரைந்துள்ளார். உடல்நலக்குறைவால் கடந்த 4 நாள்களாக சிகிச்சை பெற்றுவரும் H.ராஜாவை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். இதன்பின், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடமும் கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து, H.ராஜாவின் குடும்பத்தினருடன் உரையாடிய EPS, H.ராஜா விரைவில் வீடு திரும்பிவிடுவார் என நம்பிக்கை அளித்தார்.
News February 4, 2026
காங்., உடன் தொகுதிகள் பற்றி பேசவில்லை: கனிமொழி

காங்., உடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்த கனிமொழி, தொகுதிகள் பற்றி இதுவரை பேசவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், குழுவில் இருப்பவர்களே கூட்டணி & தொகுதிப் பங்கீடு உள்பட மற்ற விஷயங்களை பேசுவார்கள் என்றும் கூறியுள்ளார். சமீபமாக திமுக – காங்., கூட்டணியில் புகைச்சல் உண்டான நிலையில், இரு கட்சியினர் தரப்பிலும் கூட்டணி தொடர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.


