News January 9, 2026

அலர்ட்.. 13 மாவட்டங்களில் மழை பொளந்து கட்டும்

image

தமிழகத்தில் இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாலை 4 மணி வரை, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், அரியலூர், சென்னை, செங்கை, கடலூர், காஞ்சி, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. உங்க ஊரில் இப்போ மழை பெய்யுதா?

Similar News

News February 6, 2026

விடுமுறை.. இன்று முதல் 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள்

image

வார விடுமுறையையொட்டி, மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல போக்குவரத்துத் துறை சிறப்பு பஸ்களை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து இன்று முதல் 3 நாள்களுக்கு சுமார் 750 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. நீங்களும் உடனடியாக <>இங்கே<<>> கிளிக் செய்து டிக்கெட்டை புக் செய்யுங்கள்.

News February 6, 2026

டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டதா?

image

தொலைந்த டிரைவிங் லைசென்ஸை RTO அலுவலகம் செல்லாமலேயே ஆன்லைனில் பெறலாம் *<>பரிவஹன்<<>> போர்ட்டலுக்கு செல்லவும் *அதில் ‘Drivers/ Learners License’ஐ கிளிக் செய்து, மாநிலத்தை செலக்ட் செய்யவும் *‘Apply for Duplicate License’ஐ கிளிக் செய்து, விண்ணப்ப படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும் *உங்களின் ஆவணங்களை ஸ்கேன் செய்து Upload செய்யவும் *கட்டணத்தை கட்டிய பிறகு, சில நாள்களில் டூப்ளிகேட் கிடைத்து விடும்.

News February 6, 2026

தேமுதிகவின் கூட்டணி முடிவு.. பிரேமலதா புதிய அறிவிப்பு

image

தேமுதிக எந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்பதை பிப்.17-ம் தேதிக்குள் அறிவிப்பேன் என பிரேமலதா உறுதியாக அறிவித்துள்ளார். கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருப்பமனு விநியோகத்தை தொடங்கி வைத்த பின்னர் பேசிய அவர், பல தரப்பினர் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார். கடந்த 3-ம் தேதி கூட்டணி முடிவை அறிவிப்பதாக கூறிய பிரேமலதா அன்றைய தினம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!