News November 1, 2025
அற்ப அரசியல் லாபத்திற்காக பேசும் PM மோடி: சீமான்

தமிழகத்தில் பிஹார் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற PM மோடியின் பேச்சு, தமிழர்களின் மீதான வன்மத்தின் வெளிப்பாடு என்று சீமான் விமர்சித்துள்ளார். திமுகவினர் பிஹார் மக்களை துன்புறுத்துவதாக மோடி கூறியதற்கு, திமுக கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அற்ப அரசியல் லாபத்திற்காக தமிழர்கள் மீது வரலாற்று பெரும் பழியை மோடி சுமத்தியுள்ளதாக சீமான் சாடியுள்ளார்.
Similar News
News November 1, 2025
சபரிமலையில் இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு!

சபரிமலையில் வரும் 17-ம் தேதி மண்டல, மகர விளக்கு பூஜை தொடங்குகிறது. இதனையொட்டி, தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (நவ.1) தொடங்குகிறது. ஆன்லைனில் பதிவு செய்ய, <
News November 1, 2025
CM-ஐ குறிவைத்து ‘ஆபரேஷன் MKS ‘: R.S.பாரதி

பயத்தின் காரணமாகத்தான் CM ஸ்டாலினை குறிவைத்து ‘ஆபரேஷன் MKS ‘ என்ற அடிப்படையில் மோடி பேசுவதாக திமுகவின் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஆங்காங்கே போய் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவது பாஜகவுக்கு, குறிப்பாக மோடி, அமித்ஷாவுக்கு கை வந்த கலை. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிஞ்சுகிற வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் எனவும் கடுமையாக சாடியுள்ளார்.
News November 1, 2025
அதிமுகவில் இருந்து நிரந்தர நீக்கம்

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக கட்சியினர் நீக்கம் குறித்து அதிமுக தலைமை அறிக்கையில் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், செங்கோட்டையன் நீக்கம் குறித்து வெளியான அறிக்கையில் அப்படி எந்த வார்த்தைகளும் இல்லை. இதனால், OPS, சசிகலா வரிசையில் செங்கோட்டையனும் நிரந்தரமாக நீக்கம் என சொல்லப்படுகிறது.


