News October 24, 2025

அறிவித்தார் நீலகிரி மாவட்ட ஆட்சியர்!

image

நீலகிரி மாவட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும், வார்டு உறுப்பினர் தலைமையில் வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு வார்டு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டத்தில் குடிநீர் , திடக்கழிவு, தெரு விளக்கு, சாலை போன்றவைகளில் குறைபாடுகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

Similar News

News October 25, 2025

2000 பள்ளி மாணவர்கள் புத்தகம் வாங்க இலவச கூப்பன்

image

நீலகிரி மாவட்டத்தில் 4வது புத்தகத் திருவிழாவினை, அரசு தலைமைக் கொறடா கா. ராமச்சந்திரன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். பின்னர், அவர் புத்தக அரங்குகளைப் பார்வையிட்டார். மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் 2000 பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் தலா ரூ.150 மதிப்பிலான இலவசக் கூப்பன்களை வழங்கும் அடையாளமாக, 10 மாணவ, மாணவியர்களுக்குப் புத்தகங்களை வழங்கினார்.

News October 24, 2025

நீலகிரி: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

நீலகிரி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <>இணையதளத்தில்<<>> புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!

News October 24, 2025

நீலகிரி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

நீலகிரி மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!