News November 26, 2025

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்

image

நீலகிரி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது வழங்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு ரூ.1.5 லட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். தகுதியானவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் உரிய சான்றுகளுடன் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்தகவலை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

Similar News

News March 6, 2026

நீலகிரி: அனைத்து CERTIFICATES இனி WhatsApp-ல்!

image

நீலகிரி மக்களே பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 6, 2026

நீலகிரியில் உயிர் காக்கும் முக்கிய வாட்ஸ்அப் எண்!

image

நீலகிரி மக்களே விபத்து காலங்களில் அவசர சிகிச்சைக்காக ‘108’ ஆம்புலன்ஸை அழைப்பதில் ஏற்படும் முகவரி சிக்கல்களைத் தவிர்க்க, தமிழக சுகாதாரத் துறை 94450 30725 என்ற புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விபத்து நிகழ்ந்த இடத்தின் (Location) தகவலைத் துல்லியமாகப் பகிர்ந்து, ஆம்புலன்ஸ் சேவையை விரைவாகப் பெற முடியும். மனித உயிர்களைக் காக்கும் இந்த மிக முக்கியமான தகவலை SHARE பண்ணுங்க!

News March 6, 2026

நீலகிரி மாவட்டத்திற்கு மழை வாய்ப்பு!

image

தமிழக வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் சில இடங்களில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இம்மாறுபட்ட வானிலை மாற்றத்தை வானிலை ஆய்வு மையம் தனது சமீபத்திய செய்திக் குறிப்பில் உறுதிப்படுத்தியுள்ளது.

error: Content is protected !!