News March 6, 2026

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட 4 மையங்களில் தெருநாய்களுக்கான இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதாகவும். உள்ளாட்சிப் பணியாளர்கள் மூலம் பிடிக்கப்படும் நாய்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு, ஐந்து நாள் கண்காணிப்பிற்குப் பின் மீண்டும் அதே இடங்களில் விடப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Similar News

News March 12, 2026

நாமக்கல்: பள்ளி மாணவி கர்ப்பம்!

image

பொத்தனுாரை சேர்ந்தவர் அருண்குமார் (25). இவருக்கும், அரசு பள்ளியில் 10வது படிக்கும், மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்தார். நேற்று முன்தினம் உடல் நலம் பாதித்த மாணவியை அவரது பெற்றோர், GH-க்கு அழைத்து சென்றபோது, மாணவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து புகார்படி, ப.வேலுார் போலீசார், தலைமறைவான அருண்குமாரை தேடி வருகின்றனர்.

News March 12, 2026

திருச்செங்கோடு: வேன் மோதி பரிதாப பலி!

image

பூவாளக்குட்டை மேட்டுகாடு பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (45). இவர், நேற்று சொசைட்டியில் பால் ஊற்றிவிட்டு, டூவீலரில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக சென்ற, பிக் அப் வேன் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயடைந்த புஷ்பராஜை திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், புஷ்பராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். திருச்செங்கோடு ரூரல் போலிசார் விசாரனை.

News March 11, 2026

நாமக்கல்: பட்டாவில் பெயர் மாற்றுவது எப்படி?

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!