News January 30, 2026
அறிவித்தார் தி.மலை கலெக்டர்!

தி.மலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாவட்ட அளவில் கையுந்து பந்து, தடகளம், கபடி, கயிறு இழுத்தல் ஓவியப்போட்டி மற்றும் கேரம் ஆகிய போட்டிகள் இன்றும், ஸ்ட்ரீட் கிரிக்கெட், எறிபந்து, கோலம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டிகள் நாளையும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
Similar News
News February 1, 2026
தி.மலை: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, தி.மலை பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9840369614-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 1, 2026
தி.மலை: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், மாவட்ட நிர்வாகத்திடமும் (04175-233333), லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News February 1, 2026
தி.மலை: WhatsApp பண்ணுங்க.. உடனே தீர்வு

திருவண்ணாமலை மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க


