News February 24, 2026
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அறை எண் 240-ல், வருகிற பிப்ரவரி 28-ம் தேதி காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில், விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். SHAREIT
Similar News
News February 28, 2026
திருப்பூர்: இனி அடிக்கடி வங்கிக்கு அலைய தேவையில்லை!

திருப்பூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234. இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE IT.
News February 28, 2026
திருப்பூர்: அடுத்தடுத்து தற்கொலை! அதிர்ச்சி

திருப்பூர் மாவட்டத்தில் கண்டியன்கோவில் பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் (60) உடல்நலக் குறைவால் மனவேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். குருவாயூரப்பன் நகர் வாசுகி (33) குழந்தையில்லாத மனஉளைச்சலில் தற்கொலை செய்தார். கிருஷ்ணாநகர் தங்கராஜ் (41) குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டார். 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 28, 2026
திருப்பூரில் வெளிநாட்டினருக்கு 2 ஆண்டு சிறை

திருப்பூர் முருகம்பாளையம் பாறைக்காடு பகுதியில் சட்டவிராதமாக தங்கி இருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தப்பா அல் அமின், ஜாஸ் கஞ்சகான் அலி, முகமது மொனிருள் இஸ்லாம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மூவருக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


