News January 7, 2026

அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

image

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 9-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இதில், 10, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெறலாம். (வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

Similar News

News January 25, 2026

திருப்பூர் மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். <>clip.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் நிலத்தின் சர்வே நம்பர் கொடுத்து உங்களுக்கு தேவையான தரவுகளை தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை உங்களுடைய நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்.

News January 25, 2026

திருப்பூர் அருகே அதிரடி கைது!

image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பகுதியில், பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட இரண்டு பேரை மூலனூர் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 25, 2026

பல்லடத்தை சேர்ந்த இளம்பெண் தற்கொலை!

image

பல்லடத்தைச் சேர்ந்தவர் ஜீவிதா(25). எம்பிபிஎஸ் முடித்துள்ளார். இவருக்கும் கோவை தென்னமநல்லூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அபிஷேக்குக்கும் பழக்கமாகி காதலாகி கடந்த 12 நாள்களுக்கு முன் காதல் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் ஜீவிதா மருத்துவம் படித்திருந்தாலும் உரிய வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!