News December 11, 2025

அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

image

ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களை உருவாக்கும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு அறிவித்துள்ளார். முதல் பரிசாக ரூ. 10 லட்சம், 2-ம் பரிசாக ரூ. 5 லட்சம் மற்றும் 3-ம் பரிசாக ரூ. 3 லட்சம் வழங்கப்படும். மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை ஊக்குவிப்பது இதன் நோக்கமாகும்.

Similar News

News December 13, 2025

திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (13.12.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 13, 2025

JUST IN: திண்டுக்கல் அருகே சம்பவ இடத்திலேயே பலி!

image

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, நிலக்கோட்டை நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனமும் மினி வேனும் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மணியக்காரன்பட்டியைச் சேர்ந்த செல்வம்(45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த வத்தலகுண்டு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 13, 2025

திண்டுக்கல்லில் தேர்வு ஒத்திவைப்பு!

image

திண்டுக்கல்–நத்தம் சாலையில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் இன்று, நாளை நடைபெறவிருந்த மின்கம்பி உதவியாளர் தகுதிக்கான தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்தத் தேர்வு வருகிற 27, 28ஆம் தேதிகளில் திண்டுக்கல் நத்தம் சாலை குள்ளனம்பட்டி அருகே உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெறும் என என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!